செய்திகள் விளையாட்டு

இலங்கையை வீழ்த்தி ஆண்டின் முதல் ரி-20 தொடரை கைப்பற்றியது இந்தியா

சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ரி-20 போட்டியில் 78 ஓட்டங்களினால் அசத்தல் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என்று தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 201 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அவ்வணி சார்பாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான சிகார் தவான் 52 ஓட்டங்களையும் மற்றும் கே.எல் ராகுல் 54 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர்.

பந்து வீச்சில் லக்ஷன் சந்தகன் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இந்நிலையில் 202 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி 15.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 223 ஓட்டங்களை மட்டும் பெற்று தோல்வி அடைந்தது.

இதன்போது துடுப்பாட்டத்தில் தனஞ்சய டி சில்வா 57 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். இந்திய அணியின் பந்துவீச்சில் நவதீப் சைனி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

Related posts

தேர்தல் ஆ.குழுவின் விசேட கலந்துரையாடல் 20ம் திகதி

Tharani

நாடாளுமன்ற தேர்தலை பிற்போட வேண்டும் – சுமந்திரன்!

reka sivalingam

‘கொரோனா’ ஒழிப்புத் திட்டத்தைச் சீர்குலைக்கும் முயற்சி – மஹிந்த

கதிர்