செய்திகள்தலைப்புச் செய்திகள்பிரதான செய்திவவுனியா

வர்த்­த­மா­னி­யில் ‘வவு­னி­யாவ’! – வடக்கு அவைத் தலை­வர் அவ­சர கடி­தம்

வவு­னியா நகர சபை, மாந­கர சபை­யாக தர­மு­யர்த்­தப்­பட்­டுள்ள நிலை­யில் அது தொடர்­பாக வெளி­யி­டப்­பட்ட வர்த்­த­மானி அறி­வித்­த­லில் வவு­னியா என்­னும் பெயர் ’வவு­னி­யாவ ’என்று மாற்­றப்­பட்­டுள்­ளது.

இது தொடர்­பா­கக் கவ­னம் செலுத்த வேண்­டுமென்­றும், உரிய திருத்­தத்தை மேற்­கொள்ளவேண்­டுமென்­றும் வடக்கு மாகாண அவைத் தலை­வர் சி.வீ.கே.சிவ­ஞா­னம், வடக்குமாகண பிர­தம செய­லா­ள­ருக்­குக் கடி­தம் ஒன்றை அனுப்­பி­யுள்­ளார்.

இது தொடர்­பில் அவர் எழு­தி­யுள்ள கடி­தத்­தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது-

இந்த விட­யம் தொடர்­பாக பிர­த­மர் மற்­றும் பொது நிர்­வாக உள்­நாட்­ட­லு­வர்­கள், மாகாண சபை­கள் மற்­றும் உள்­ளூ­ராட்சி அமைச்­ச­ரால் வெளி­யி­டப்­பட்ட 06/09/2022ஆம் திகதி 2296/05 ஆம் இலக்க வர்த்­த­மானி பத்­தி­ரிக்­கைக்கு தங்­கள் அவ­தா­னம் கோரப்­ப­டு­கின்­றது.

இந்த வர்த்­த­மா­னி­யில் “வவு­னியா நகர சபை, வவு­னியா மாந­கர சபை” ஆகத் தாபிப்­பது என தமி­ழில் இருக்­கும் நிலை­யில், ஆங்­கி­லத்­தில் “வவு­னி­யாவ உர்­பன் கவுன்­சில்” என்­றும் “வவு­னி­யாவ முனி­சிப்­பல் கவுன்­சில்” என்­றும் உள்­ளது.

வர­லாற்று ரீதி­யாக இந்த உள்­ளூ­ராட்சி மன்­றத்­தின் பெயர் தமி­ழில் “வவு­னியா” என்­றும், ஆங்­கி­லத்­தில் “வவு­னியா” என்­றும் அறி­யப்­பட்­டும், பதி­யப்­பட்­டும் வந்­துள்­ளது. ஆங்­கி­லத்­தில் “வவு­னி­யாவ” என்று பிர­சு­ரிப்­பது தவ­றா­ன­தும், வர­லாற்­றுப் பிறழ்­வா­ன­து­மா­கும்.

“வவு­னியா” என்ற தமிழ் பிர­தே­சத்­தின் வர­லாற்­றுப் பெயரை “வவு­னி­யாவ” என ஆங்­கி­லத்­தில் அறி­யப்­ப­டுத்­து­வதோ, பதி­யப்­ப­டு­வதோ தவ­றா­னது என்­ப­தைப் பொது நிர்­வாக, உள்­நாட்­ட­லு­வல்­கள், மாகாண சபை­கள் மற்­றும் உள்­ளூ­ராட்சி அமைச்­சின் கவ­னத்­துக்­குக் கொண்டு வந்து, “வவு­னியா” என ஆங்­கி­லத்­தில் உரிய திருத்­தத்தை மேற்­கொள்ள நட­வ­டிக்கை எடுக்­கக் கோரும்­படி கேட்­டுக் கொள்­கின்­றேன். – என்­றுள்­ளது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,214