கிழக்கு மாகாணம் செய்திகள்

வறிய பெண்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த தையல் இயந்திரம்

பெண்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் தையல் பயிற்சி வழங்கப்பட்ட பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்வு வாழைச்சேனை வேல்ட் விஷன் காரியாலயத்தில் இன்று (11) நடைபெற்றது.

வாழைச்சேனை வேல்ட் விஷன் நிறுவனத்தின் முகாமையாளர் எட்வின் ரணில் வழிகாட்டலில் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வறிய பெண்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் தையல் இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வேல்ட் விஷன் நிறுவனத்தின் வாழ்வாதார பொறுப்பாளர் அ.கிருஷாந்த், கல்குடா கிராம அதிகாரி க.கிருஸ்ணகாந்த், வேல்ட் விஷன் நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், பயனாளிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது கிண்ணையடி, கண்ணிபுரம், நாசிவந்தீவு, பேத்தாளை, சுங்hகன்கேணி, கல்மடு ஆகிய பிரதேசங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பதினாறு பெண்களுக்கு ஒன்பது இலட்சம் ரூபாய் பெறுமதியில் தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இங்கு தெரிவு செய்யப்பட்டு தையல் பயிற்சி வழங்கப்பட்ட பதினாறு பெண்களுக்கு தையல் இயந்திரத்தினை கையாளும் முறைகள் தொடர்பில் பயிற்சிகள் வழங்கி வைக்கப்பட்டது. (150)

Related posts

கிளி மாவட்ட உள்ளூர் வீதிகளை புனரமைத்தல்

Tharani

புனரமைக்கப்பட்ட வீதி மக்கள் மயப்படுத்தல்

G. Pragas

சுனிலின் விடுதலை குறித்து கொதிப்படைந்த மங்கள

G. Pragas