செய்திகள் யாழ்ப்பாணம்

வலி தெற்கில் அத்தியாவசிய பொருட்கள் கையளிப்பு!

இலண்டனில் வசித்து வரும் ஏழாலையை சேர்ந்த சிவலிங்கம் சிவகாந்தன் என்பவரால் வழங்கப்பட்ட 15 இலட்சம் ரூபா அன்பளிப்பின் மூலம் வலி தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட ஏழாலை மற்றும் குப்பிளான் கிராமங்களில் வாழும் சுமார் 1500 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்குகின்ற செயற்பாடு இன்றைய தினம் (04) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோர் சிவகாந்தனை தொடர்பு கொண்டு வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்களுக்கு உதவுமாறு வினயமாக கேட்டுள்ளனர். இதையடுத்து சிவகாந்தன் 15 இலட்சம் ரூபாவினை ஏழாலையின் சமூகசெயற்பாட்டாளர் செல்வகாந்தனிடம் வழங்கியுள்ளார்.

இதன் மூலம் சித்தார்த்தன் மற்றும் கஜதீபன் ஆகியோரின் அறிவுறுத்தலுக்கமைய ஏழாலை மற்றும் குப்பிளான் கிராமங்களில் வாழும் சுமார் 1500 குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றது.

இதன்படி அத்தியாவசியப் பொருட்கள் வழங்குகின்ற செயற்பாடு இன்று காலை வலி தெற்கு பிரதேச சபைத் தலைவர் க.தர்சன் தலைமையில் நடைபெற்றது.

Related posts

கோத்தாபயவை இந்தியாவிற்குள் அனுமதிக்க கூடாது; திருமா சீற்றம்

கதிர்

ராஜிதவை கைது செய்ய உத்தரவு!

G. Pragas

டிரோன் கமராவின் மூலம் கஞ்சா சேனைகள் சுற்றிவளைப்பு! மூவர் கைது!

Tharani