செய்திகள் பிந்திய செய்திகள் யாழ்ப்பாணம்

வலி தெற்கில் கிருமி ஒழிப்பு மருந்து விசிறல்

வலி தெற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கின்ற பொதுச் சந்தைகள், பேருந்து நிலையங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு கிருமி தொற்று நீக்கி மருந்துகள் நேற்று (24) விசிறப்பட்டுள்ளது.

வலி தெற்கு பிரதேச சபைத் தலைவர் க.தர்ஷனின் மேற்பார்வையில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் மற்றும் பிரதேச சபை ஊழியர்களின் ஒத்துழைப்போடு குறித்த கிருமி நீக்கல் மருந்துகள் விசிறப்பட்டுள்ளது.

“ஊரடங்கு அமுல்படுத்தப்படுகின்ற நாட்களில் தொடர்ச்சியாக இச்செயற்பாடு எமது பிரதேச சபை எல்லைக்குள் நடைமுறைப் படுத்தப்படுகின்றது.

மேலும் பிரதேச சபையினால் செய்யக்கூடிய விடயங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றோம் இதற்கு பொதுமக்களும் சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” – என வலிதெற்கு பிரதேச சபைத் தலைவர் இதன்போது தெரிவித்தார்.

Related posts

நாளை தென்படும் மோதிர வடிவிலான கங்கண சூரிய கிரகணம்

Tharani

கொரோனா வைரஸ் பற்றி மீம்; சர்ச்சையில் பிரபல நடிகர்!

Bavan

சஜித்துக்கு கிளிநொச்சியில் பொங்கல்

G. Pragas

Leave a Comment