செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

வலி தெ.மே பிரதேச சபையின் ஏற்பாட்டில் காெராேனா பரிசாேதனை!

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் பொதுச் சுகாதார பிரிவினரின் ஒழுங்குபடுத்தலில் 16 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இன்று (16) கொரோனா தொற்று பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் பாஸ்டரின் ஆராதனையில் கலந்து கொண்ட வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பொதுமக்கள் 15 பேரும் காரைநகர் பகுதியினைச் சேர்ந்த ஒருவரும் இப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இப் பரிசோதனைச் செயற்பாடுகள் பிரதேச சபைக் கலாசார மண்டபத்தில் தவிசாளர் அ.ஜெபநேசன் ஒழுங்குபடுத்தலில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் இ.சோதீஸ் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

தொற்றுக்குள்ளானவர்கள் எமது பகுதியிலேயே வெவ்வேறு இடங்களைச் சேர்ந்தவர்களாக கணப்பட்டமையாலும், ஒருவர் காரைநகர் பகுதியினைச் சேர்ந்தவர் என்பதனாலும், ஒவ்வொருவரது வீடுகளுக்கும் சென்று தொற்று நீக்கம் செய்யப்பட்டு, நோயாளர்களை பரிசீலிப்பதில் காணப்பட்ட வசதியீனங்கள் காரணமாக வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் கலாசார மண்டபத்தினை இச்செயற்பாடுகளுக்கு பயன்படுதத்துவதற்கு எம்மால் அனுமதிக்கப்ட்டது – என்று வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் அ.ஜெபநேசன் தெரிவித்தார்.

பரிசோதனைகளின் பின்னர் நோயாளர் காவு வண்டிகள், பயன்படுதத்தப்பட்ட தளபாடங்கள் உபகரணங்கள் மற்றும் பிரதேச சபைக் கலாசார மண்டபம் என்பன வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் கொரோன விசேட செயலணியினரால் முற்றுமுழுதாக தொற்றுநீக்கம் செய்யப்பட்டது.

தொடர்ந்து பாதுகாப்பு கருதி 2 நாட்களுக்கு இவ் கலாசார மண்டபம் பயன்படுத்தப்படுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது என்றும் பிரதேச சபையின் தவிசாளர் அ.ஜெபநேசன் தெரிவித்தார்.

Related posts

ஆசிய மெய்வல்லுனர் போட்டியில் தங்கம் வென்ற மலையக இளைஞன்

Tharani

உம்ரா விசா வழங்குவதை நிறுத்தியது சவுதி

G. Pragas

அரசியல் கைதியின் மரணத்துக்க நீதி காேரி கவனயீர்ப்பு!

G. Pragas