செய்திகள் முல்லைத்தீவு

“வலி நிலைத்த வாழ்கை” நூல் வெளியீடு

முல்லை பிரசாந்தின் “வலி நிலைத்த வாழ்கை” நூல் வெளியீட்டு விழா இன்று (26) இடம்பெற்றுள்ளது.

குறித்த விழா முல்லைத்தீவு அளம்பில் ரோமன் கத்தோலிக்க பாடசாலையில் இடம்பெற்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் முத்துஐயன்கட்டு வலது கரை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் அதிபர் நாகேந்திரராஜாவினுடைய தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் சட்டத்தரணி சுகாஷ், தமிழர் மரபுரிமை பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான நவநீதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நூலில் யுத்தகால வலிகள் மற்றும் யுத்தத்தின் பின்னரான வலிகள் நிறைந்த வாழ்க்கையை மையமாககொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தம்பதியினர் படுகொலை!

G. Pragas

உடற்பயிற்சி போட்டியில் வட மாகாணத்திற்கு 3 பதக்கங்கள்!

G. Pragas

சிங்கள வாக்குகளுக்காக தமிழை வைத்து இனவாதம்

G. Pragas

Leave a Comment