நேற்று நடைபெற்ற வடமராட்சி, வல்லிபுர ஆழ்வார் தேர்த் திருவிழாவில் பங்கேற்ற பக்தர்களின் தங்கச் சங்கிலிகள் அறுக்கப்பட்டுள்ளன.
ஐந்து பேரின் தங்கச் சங்கிலிகள் திருடர்களால் அறுக்கப்பட்டுள்ளன என்றும், அவற்றின் மொத்த நிறை சுமார் 8 அரைப் பவுண் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவங்கள் தொடர்பாகப் பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.