செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

வல்வெட்டித்துறையில் திடீர் சுற்றிவளைப்பு; இருவர் கைது!

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை, கெருடாவில், சீலாப்புலம் பகுதியில் இன்று (21) அதிகாலை முதல் சுமார் 3 மணிநேரம் இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து திடீர் சுற்றிவளைப்புத் தேடுதலை முன்னெடுத்தனர்.

இதன்போது நீதிமன்றப் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

வல்வெட்டித்துறை, கொம்மாந்துறையில் கடந்த வாரம் கிணறு ஒன்றிலிருந்து 3 குண்டுகள் மற்றும் துப்பாக்கியும் மீட்கப்பட்டன. இந்நிலையில் சீலாப்புலம் பகுதியில் இன்று அதிகாலை 4.30 மணி முதல் காலை 7.30 மணிவரை இராணுவம் மற்றும் பொலிஸாரால் சுற்றிவளைப்புத் தேடுதல் முன்னெடுக்கப்பட்டது.

ஊரணி இராணுவ முகாம் படையினரும் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொலிஸாரும் இணைந்து முன்னெடுத்த இந்தத் தேடுதலில் சுமார் 40 வீடுகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

Related posts

மாடுகளை திருடிய நபர்கள் கைது!

G. Pragas

குழியில் விழுந்து சிறுவர்கள் இருவர் பலி!

G. Pragas

சட்டவிரோத கட்டடங்கள் இடிக்கப்படும்

கதிர்