in ,

வவுனியாவில் கொரோனா தொற்றால் நால்வர் சாவு!

வவுனியாவில் கொரோனா தொற்றால் நால்வர் சாவு!

வவுனியாவில் கொரோனாத் தொற்றால் மூவர் நேற்று உயிரிழந்துள்ளனர். மற்றொருவர் கொரோனா விடுதியில் சேர்க்கப்பட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.

வவுனியா மதவுவைத்தகுளம் கொரோனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நேரியகுளம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கொவிட் தொற்று நோயால் நேற்று உயிரிழந்தார்.

இதேவேளை, வவுனியா உக்கிளாங்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் சுகவீனம் காரணமாக வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனாத் தொற்று  உறுதிப்படுத்தப்பட்டது.

அவர் மருத்துவமனையின் கொரோனா விடுதியில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், நேற்று உயிரிழந்தார்.

போர்க்குற்றத்திற்கு சர்வதேச விசாரணை மூலமே தீர்வுவேண்டும் யாழ் மாநகர சபையில் தீ்மானம்!

“அரசின் வாழ்வாதார உதவித் தொகை கிடைத்துள்ளது”_ யாழ் அரச அதிபர்!