in ,

வவுனியாவில் கோயிலுக்கு சென்ற பெண்னைக் கடத்தி நகைகள் கொள்ளையிட்ட பின்னர் விடுவிப்பு!

வவுனியாவில் வான் ஒன்றில் வந்தவர்களால் பெண் ஒருவர் கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்றுக் (19) காலை வவுனியா, கோவில்குளம் பகுதியில் உள்ள அகிலாண்டேஸ்வரர் சிவன் ஆலயத்துக்குச் சென்று வழிபட்டு விட்டு வீடு நோக்கிய திரும்பிய பெண் ஒருவரை வேன் ஒன்றில் ஆலயம் முன்பாக வந்த நபர்கள் கடத்திச் சென்றுள்ளனர்.

குறித்த பெண் அணிந்திருந்த 3 பவுண் தங்க நகைகளை கொள்ளையிட்ட பின்னர் பெண்ணை மடுகந்தை பகுதியில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.

மேற்படி கடத்தல் தொடர்பில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து வவுனியா பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பூநகரி பிரதேசத்துக்கு நாளை நீர் விநியோகத் தடை!

நாட்டில் மேலும் 43 பேர் மரணம்!