செய்திகள் பிரதான செய்தி

வவுனியாவில் தனியார் கல்வி நிலையங்கள் பூட்டு – சுகாதார திணைக்களம் உத்தரவு

வவுனியாவில் தனியார் கல்வி நிலையங்களூடாக டெங்கு காய்ச்சல் ஏற்படுவது சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் தனியார் கல்வி நிலையங்களை உடன் மூடுமாறு சுகாதார திணைக்களத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக சுகாதார திணைக்கள அதிகாரி கருத்து தெரிவிக்கையில்,

வவுனியாவில் கடந்த 9 ஆம் மாதத்தில் இருந்து தற்போது வரை  35 மாணவர்கள் டெங்கு நோய் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இதில் 75 வீதமான மாணவர்களிற்கு தனியார் கல்வி நிலையங்களினாலேயே இத்தொற்று ஏற்பட்டுள்ளது. 

இதன்  காரணமாக குருமன்காடு, வைரவபுளியங்குளம் பகுதிகளில் இயங்கிவரும் 28 தனியார் கல்வி நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு கல்வி நிலைய நிர்வாகிகளிற்கு அறிவுறுத்தியுள்ளோம். 

மேலும் குருமன்காடு, வைரவபுளியங்குளம் பகுதிகளிலேயே அதிகமாக டெங்குவின் தாக்கம் இருப்பதன் காரணமாக இப்பகுதிக்குரிய கிராம சேவகருக்கு இது தொடர்பாக அறிவுறுத்தல் வழங்கியுள்ளதுடன் இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளோம் என தெரிவித்தார்.


Related posts

வேலணை மத்திய கல்லூரிக்கு மீண்டும் பதக்கம் !

G. Pragas

இன்றைய நாள் ராசி பலன்கள் (8/3) – உங்களுக்கு எப்படி?

Bavan

ஊனமுற்ற இராணுவ வீரர்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம்!

G. Pragas