செய்திகள் பிந்திய செய்திகள் வவுனியா

வவுனியாவில் வாள் வெட்டு – அறுவர் காயம்!

வவுனியா – ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாணிக்கர் வளவு பகுதியில் நேற்று (07) இரவு இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

வீடொன்றிற்குள் நுழைந்த இளைஞர் குழுவினர் அங்கிருந்தவர்கள் மீது வாளால் தாக்கியதுடன், மான்கொம்பினாலும் தாக்கியுள்ளனர். குறித்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சகோதர்கள் மற்றும் பெண் ஒருவர் உட்பட மூவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த சம்பவத்தில் காயமடைந்ததாக தெரிவித்து மேலும் ஒரு பெண் உட்பட மூவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்னர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கபடும் மதுபோதையில் நின்றிருந்த இரண்டு இளைஞர்களை ஓமந்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Related posts

சுற்றுலா மேற்கொள்ள தடையில்லை!

reka sivalingam

பிரதேச சபை உறுப்பினர் பதவி பறிபோனது

கதிர்

ரணில் எமக்கு சவால் கிடையாது

Tharani