செய்திகள் பிரதான செய்தி வவுனியா

வவுனியாவில் 1200வது நாளாக தொடர்கிறது போராட்டம்!

வவுனியாவில் சுழற்சி முறையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று (01) தமது போராட்டம் 1200 நாட்களை கடந்திருப்பதை முன்னிட்டு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

இதன்போது “எங்கே எங்கே பிள்ளைகள் எங்கே”, “வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்”, “ஓமந்தையில் கையளிக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே?” போன்ற பல்வேறான கோசங்களை எழுப்பியவாறு, சமூக இடைவெளிகளை பேணி இப்போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஊடகப்பேசாளரும் முன்னாள் எம்பி எம்.ஏ.சுமந்திரனுக்கு மஹிந்த ராஜபக்ஷவின் உடையை அணிவித்துள்ளமை போன்றதான புகைப்படமொன்றினையும் காட்சிப்படுத்தியிருந்தனர்.

இதன்போது அதிகளவிலான புலனாய்வாளர்கள், குறித்த போரட்டத்தினை புகைப்படமெடுத்ததுடன் அங்கு பிரசன்னமாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

எமது கூட்டணி வெற்றி பெறும் – மைத்திரி தெரிவிப்பு

reka sivalingam

யாழ் நூலக எரிப்பு நினைவேந்தல் முன்னணியால் அனுஷ்டிப்பு!

G. Pragas

உலருணவு பொதிகள் வழங்கி வைப்பு

G. Pragas