செய்திகள் வவுனியா

வவுனியாவில் 41 பேர் கடமைகளை பொறுப்பேற்கவில்லை!

அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்ட 50 ஆயிரம் பட்டதாரிகளிற்கான தொழில் வாய்ப்பில் வவுனியா மாவட்டத்தில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொண்ட 41 பேர் இன்னும் கடமைகளை பொறுப்பேற்கவில்லை என்று வவுனியா மாவட்டசெயலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொழில் பெறும் 50 ஆயிரம் பட்டதாரிகளின் பெயர் விபரங்கள் உள்ளூராட்சி மாகாணசபை அமைச்சின் இணையத்தளத்தில் அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது.

அந்தவகையில் வவுனியா மாவட்டத்தைச்சேர்ந்த 343 பட்டதாரிகளின் பெயர் விபரங்கள் அதில் வெளியிடப்பட்டிருந்தது.

அவர்களிற்கான நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்வு வவுனியா மாவட்டசெயலகத்தில் கடந்த 2ம் திகதி இடம்பெற்றது.

அந்தவகையில் நியமனம் வழங்கப்பட்டு 7 நாட்கள் கடந்தும் தொழில்வாய்ப்பை பெற்றுக்கொண்ட 41 பட்டதாரிகள் இதுவரை கடமைக்கு சமூகமளிக்கவில்லை.

Related posts

இந்தத் தேர்தல் நியாயம் – அநியாயம் இரண்டுக்கும் இடையிலான போட்டியாகும்

G. Pragas

தமிழர்களை கொன்ற இராணுவ சார்ஜன்ட் சுனிலுக்கு பொது மன்னிப்பு?

G. Pragas

அரசியல் திருப்பம்; சஜித்துடன் இணைகிறார் சந்திரிகா

G. Pragas