கிளிநொச்சிசெய்திகள்பிரதான செய்தியாழ்ப்பாணம்வவுனியா

வவுனியா கோரவிபத்தில் யாழ்.பல்கலை மாணவி உட்பட மூவர் பலி

யாழில் இருந்து கொழும்பு சென்ற அதிசொகுசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே சாரதி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
வவுனியா நொச்சுமோட்டை பாலத்துக்கு அருகில் நேற்று இரவு 12.15 மணியளவில் இந்தக் கோர விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மாணவியான நாவலப்பிட்டிய பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் சயாகரி (வயது 23), சாரதியான கோவிலடி, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த எஸ்.சிவரூபன் (வயது 32), தம்பசிட்டி, பருத்தித்துறையைச் சேர்ந்த இராமலிங்கம் நிதர்சன் (வயது 24) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

மேலும் பேருந்தில் பயணித்த 16 பேர் காயமடைந்த நிலையில் நால்வர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான பேருந்து தலைகீழாக புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,282