செய்திகள் பிரதான செய்தி வவுனியா

பொத்துவில் வரை இ.போ.ச. சேவை ஆரம்பம்

வவுனியாவிலிருந்து திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு – பொத்துவில் வரையான இலங்கை போக்குவரத்து சபை பேரூந்துகள் முதன் முதலாக சேவையில் ஈடுபட்டுள்ளன.

இ.போ.ச. வவுனியா சாலையின் ஏற்பாட்டில் பயணிகளின் போக்குவரத்து வசதி கருதி இச் சேவை நேற்று (01) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மாலை 7.30 மணிக்கு வவுனியாவிலிருந்து புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு திருகோணமலையை அடைந்து இரவு 10.00 மணிக்கு திருகோணமலையிலிருந்து புறப்பட்டு மறு நாள் அதிகாலை 06.00 மணிக்கு பொத்துவில் பஸ் நிலையத்தை சென்றடையும்.

அதேபோல் இரவு 10.00 மணிக்கு பொத்துவிலிருந்து புறப்படும் இ.போ.சபை பேரூந்து மறுநாள் காலை 7.00 மணிக்கு வவுனியா வந்தடையும்.

Related posts

சிறுவர்களின் எடை அசாதாரணமாக அதிகரிப்பு; பெற்றோருக்கு அறிவுறுத்தல்

Tharani

இந்தியாவுக்கு இமாலய இலக்கு

G. Pragas

இரவாகியும் தொடர்கிறது போராட்டம்!

Tharani