வவுனியா பொது மருத்துவமனை பணியாளர்கள் மூவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.
வவுனியா, பட்டாணிச்சூரில் கொரோனா தொற்று இனங்காணப்பட்ட பின்னர், வவுனியா நகரப் பகுதியில் பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அவற்றின் ஒரு தொகுதி முடிவுகள் இன்று வெளியான நிலையில், 26 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. அவர்களில் மூவர் மருத்துவமனைப் பணியாளர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.