in

வவுனியா மாவட்டச் செயலராக மீண்டும் பெரும்பான்மையினத்தவர்!

வவுனியா மாவட்டச் செயலராக மீண்டும் பெரும்பான்மையினத்தவர்!

வவுனியா மாவட்டச் செயலராக மீண்டும் பெரும்பான்மையினத்தவர் ஒருவரே நியமிக்கப்படவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பௌத்தசாசன அமைச்சில் உயர் அதிகாரியாக பணியாற்றிய சரத்சந்திர என்பவரே  வவுனியா மாவட்டச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகின்றது.

வவுனியா மாவட்டச்செயலராகக் கடமையாற்றிய சமன்பந்துலசேன வடக்கு மாகாண பிரதம செயலாளராக பதவிஉயர்வுபெற்றுச்சென்றிருந்தார்.

இதனையடுத்து கடந்த ஒரு மாதகாலமாக மேலதிக மாவட்டச்செயலராக கடமையாற்றிய தி.திரேஸ்குமார் பதில் மாவட்டச்செயலராக கடமையாற்றி வருகின்றார்.

“கொடுங்கோல் ஆட்சியால் கோத்தா அரசு படுதோல்வி நாட்டை நிர்வகிக்கத் தகுதியில்லை” சஜித் அணி விளாசல்!

6 மாதங்களான குழந்தை கொரோனாவால் சாவு!