செய்திகள் பிராதான செய்தி வவுனியா

வவுனியா மின்சார சபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மின்சார சபை ஊழியர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வவுனியா மின்சார சபை ஊழியர்கள் இன்று (07) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டகாரர்கள், ‘முக்கிய குற்றவாளியை கைதுசெய், ‘எம்மை தாக்கியவரை பொலிஸார் கைதுசெய்ய தயங்குவது ஏன்?’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பினர்.

வவுனியாவில் கடந்த திங்கட்கிழமை மாலை ஆச்சிபுரம் பகுதிக்கு தொழில் நிமித்தம் சென்ற மின்சார சபை ஊழியர்கள் மீது அங்கிருந்த குழுவினரால் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அறுவர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சஜித்துடன் இணைந்தார் ஆரையம்பதி தவிசாளர்

G. Pragas

சகிப் அல் ஹசனுக்கு அதிகபட்ச தண்டனை விதித்தது ஐசிசி

G. Pragas

புத்தளத்தில் முஸ்லிம்கள் வெளியேற்ற நினைவு தினத்தினை முன்னிட்டு எதிர்ப்பு

G. Pragas

Leave a Comment