செய்திகள் பிராதான செய்தி வவுனியா

வவுனியா வைத்தியசாலையில் வெடிகுண்டு தேடிய பொலிஸ்!

வவுனியா வைத்தியசாலையில் வெடிபொருள் இருப்பதாக வவுனியா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து பொலிஸார் இன்றையதினம் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று (11) காலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மோப்ப நாயின் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர். மேலும், வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு, நோயாளர்களின் விடுதிகள், விபத்துப்பிரிவு, மலசலகூடம், உணவகம், அதிகாரிகளின் அறைகள் அமைந்துள்ள பகுதிகளில் கடும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் வைத்தியசாலையின் நுழைவாயில் பகுதியில் பொலிஸார் பொதிகளை கடும் சோதனையின் பின்னர் அனுமதித்திருந்தனர்.

இரண்டு மணிநேரத்திற்கு மேலாக குறித்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. எனினும் எவ்வித வெடிபொருள்களும் பொலிஸாரினால் மீட்கப்படவில்லை.

Related posts

மேற்கிந்திய அணியின் தலைவராக பொலார்ட் நியமனம்

G. Pragas

கடும் காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு

G. Pragas

“கந்தகட்டிய காமண்டி” காமன் கூத்து ஆவணப்படம் திரையிடல்

G. Pragas

Leave a Comment