in , ,

வவு.வில் இரு வீடுகள் மீது தாக்குதல் – யாழில் இருந்தே தாக்குதல் குழு சென்றதாம்!

வாள்களுடன் சென்ற குழு ஒன்று இரு வீடுகளுக்குள் புகுந்து உடமைகளை சேதப்படுத்திய சமபவம் வவுனியாவில் நேற்று (6) இடம்பெற்றுள்ளது.

வவுனியா – மூன்று முறிப்பு பகுதியிலுள்ள வீடு ஒன்றில் வாடகைக்கு குடியிருக்கும் இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம், ஓட்டுமடத்தடியைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்ததாகவும், பெண் வீட்டார் சம்மதமின்றி குறித்த பெண்ணை பதிவு திருமணம் செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் இருந்து வாகனம் ஒன்றில் சென்ற குறித்த பெண்ணின் தந்தை, சகோதரி உட்பட மேலும் சிலர் இளைஞன் குடியிருந்த வீட்டின் உரிமையாளரது வீட்டுக்குள் புகுந்து யன்னல் கண்ணாடியை உடைத்து குறித்த பெண்ணும், இளைஞனும் எங்கே எனக் கேட்டு வாள் முனையில் அச்சுறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், குறித்த வீட்டு வளவில் அமைந்துள்ள இளைஞன் வாடகைக்கு குடியிருக்கும் வீட்டிற்குள்ளும் புகுந்த குறித்த குழுவினர், அறையின் கதவுகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

வெட்டுக்காயங்களுடன் சிக்கிய சடலம்!

சிவஞானசோதிக்கு நாளை மக்கள் அஞ்சலிக்கூட்டம்!!!