எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வாகனங்களுக்கான காபன் பரிசோதனைக்கான கட்டணம் குறைக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
காபன் பரிசோதனை கட்டணம் குறைப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலையும் நிதியமைச்சு வெளியிட்டுள்ளது.
வற் வரி குறைக்கப்பட்டுள்ளமையை அடுத்தே இவ்வாறு மோட்டார் வாகன புகை பரிசோதனைக்கான கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே முன்னைய அரசாங்கம் அமுல்படுத்திய எரிபொருள் விலைசூத்திரத்தையும் அரசாங்கம் இரத்து செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.