கிழக்கு மாகாணம் செய்திகள் பிரதான செய்தி

வாகரையில் நிரந்தர வங்கி கிளை திறப்பு!

மட்டக்களப்பு – வாகரை பிரதேசத்திற்கான இலங்கை வங்கி கிளை இடமாற்றப்பட்டு மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (22) இடம்பெற்றது.

வாகரை இலங்கை வங்கி கிளை முகாமையாளர் வி.தரணிதரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண உதவி பொது முகாமையாளர் திருமதி.குமுதினி யோகரட்ணம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு புதிய வங்கி கிளையினை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண செயற்பாட்டு முகாமையாளர் தமித் எக்கநாயக்க, மட்டக்களப்பு மாவட்ட பொது முகாமையாளர் ஏ.பிரதீபன், திருகோணமலை மாவட்ட பொது முகாமையாளர் வி.பிரதீபன், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இலங்கை வங்கி கிளை முகாமையாளர்கள், வங்கி ஊழியர்கள், மதகுருமார்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

வாகரை பிரதேசத்திற்கான இலங்கை வங்கி கிளை வாகரை பிரதேச சபைக்கு அருகில் தற்காலிகமாக இயங்கி வந்த நிலையில் டிஜிட்டல் தானியங்கியுடனான வங்கி சேவையினை வாகரை பிரதேச வைத்தியசாலைக்கு அருகில் புதிதாக இடமாற்றப்பட்டுள்ளதாக கிளை முகாமையாளர் வி.தரணிதரன் தெரிவித்தார். (150)

Related posts

கிழக்கை பௌத்த மாநிலமாக்கவே செயலணி – விக்னேஸ்வரன்

G. Pragas

ரயில்முன் பாய்ந்து குடும்பஸ்தர் தற்கொலை!

Tharani

தளிர் களம்; சுட்டிகளின் சுட்டித்தனம் – (காணொளிகள் 39 – 43)

Tharani