in

வாட்டும் வெப்பத்தால் கருகித் துடிக்கும் சீனா!

வாட்டும் வெப்பத்தால் கருகித் துடிக்கும் சீனா!

சீனாவில் ஜூலை மாதம் முதல் தொடர்ந்து வெப்பமான வானிலை நிலவுவதால் , வடமேற்கு சீனாவின் கன்சு மாகாணத்தில் உள்ள பல மாவட்டங்கள் வறட்சியை எதிர்கொண்டுள்ளன.
இதன் காரணமாக சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 60,000 ஹெக்ரெயர் பரப்பளவிலான விவசாயப் பயிர்கள் கருகி, நாசமாகியுள்ளன. அடுத்த மாதம் வரை வறட்சியான காலநிலை தொடரும் என்பதால், பாதிப்புக்கள் இன்னும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.

காலநிலை மாற்றத்தாலேயே சீனாவில் மோசமான அளவு மழை வெள்ளம், வறட்சி, காட்டுத் தீ ஆகியவை ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஏற்கனவே மேற்கு ஐரோப்பாவின் ஜெர்மனி, நெதர்லாந்து, லக்சம்பர்க், பெல்ஜியம், ப்ரூசல்ஸ் ஆகிய நாடுகளிலும் காலநிலை மாற்றத்தால் பெரும் இயற்கை பேரிடர்கள் நிகழ்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தூங்கிய காவலர்கள் தப்பித்தனர் கைதிகள்!

உலகிலேயே முதன்முறையாக குழந்தைகளுக்கும் கொரோனாத் தடுப்பூசி!