செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

வாள்வெட்டு சம்பவம்; அறுவருக்கு மறியல் – நீதிவான் எச்சரித்தார்!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் முன்பாக நேற்று (08) மாவட்ட செயலக சுற்றுச்சூழல் அதிகார சபை உத்தியோகத்தர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களை 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டது.

அத்தோடு இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெகன் அல்லது கைலாயம் என்ற பிரதான சந்தேக நபரிடமிருந்து கைக்குண்டு, வாள்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்ட நிலையில் தனியான வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

சந்தேக நபர்கள் 6 பேரையும் யாழ்ப்பாணம் நீதிமன்றில் ஆஜரப்படுத்தியதுடன், “சந்தேக நபர்கள் 6 பேருக்கும் நேற்று காலை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் வழக்கு இருந்தது. அதனைச் சாட்டாக வைத்து காலை 8 மணிக்கு யாழ்ப்பாணம் மாவட்ட செயலக ஊழியர் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பித்து மல்லாகம் நீதிமன்றுக்குச் சென்றுள்ளனர்” என்று யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெர்னாண்டோ மன்றுரைத்தார்.

சந்தேக நபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி பிணை விண்ணப்பம் செய்தார். எனினும் “உயிரை மதிக்காது வன்முறைகளில் ஈடுபட்டால் உள்ளேதான் தொடர்ந்து இருக்க வேண்டும்” என்று எச்சரித்த நீதிவான் சந்தேக நபர்கள் 6 பேரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

Related posts

இ.போ.ச ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடர்கிறது

G. Pragas

இந்தியாவில் இருந்து கடலட்டை கடத்தல்; நால்வர் கைது!

G. Pragas

கோப்பாயில் இரு நாட்களில் 50 பேர் கைது!

reka sivalingam