in ,

வாழைச்சேனையில் விவசாய சிகிச்சை முகாம்!

மட்டக்களப்பு – வாழைச்சேனை விவசாய விரிவாக்கல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் பயிற்சி சிகிச்சை குழுவினால் தோட்ட விசாயிகளுக்கான விவசாய சிகிச்சை முகாம் வாழைச்சேனை பிரதேச செயலகம் முன்பாக இன்று (14) இடம்பெற்றது.

இதில் வாழைச்சேனை பிரதேச செயலக விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வாழைச்சேனை விவசாய விரிவாக்கல் திணைக்கள உத்தியோகத்தர்கள், உலக தரிசன நிறுவன உத்தியோகத்தர்கள், விவசாயிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது வாழைச்சேனை விவசாய விரிவாக்கல் திணைக்களத்தின் நிரந்தர பயிற்சி குழுவின் விவசாய போதனாசியர்களான எம்.ஜமால்டீன், கே.நிசாந்தன், எஸ்.சிறிகண்ணன் ஆகியோரால் விவசாய சிகிச்சை முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு நோய்த்தாக்கம் பற்றி விளக்கமளிக்கப்பட்டது.

அத்தோடு தோட்ட விசாயிகளின் விவசாய செய்கையில் ஏற்படும் நோய்த் தாக்கம், இலை மற்றும் காய்களில் பிடிக்கப்பட்டிருக்கும் பூச்சிகள் தொடர்பாக ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் நிரந்தர தீர்வு வழங்கும் வகையில் கருத்துக்கள் வழங்கப்பட்டது. (150)

பாலை மரக்குற்றிகளுடன் மூவர் கைது!

இன்று 19 பேருக்கு தொற்று!