in ,

வாழைச்சேனை- மதுபான போத்தல்களுடன் 2 பேர் கைது

ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய மதுபான போத்தல்களை கொண்டு சென்றார் என்ற குற்றச்சாட்டில் இருவர் வாழைச்சேனை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

இன்று (31) திங்கட்கிழமை வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் ரிதிதென்ன வீதியில் மதுபானத்தை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று பொலிஸாரால் இனங்காணப்பட்டது.

குறித்த லொறியில் 9,240 மதுபான போத்தல் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பெறுமதி ஒரு கோடியே 70 இலட்சமாகும்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வாழைச்சேனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு எதற்கு அனுமதி வழங்கப்படாத இந்தச் சந்தர்ப்பத்தில் இவ்வாறு மதுபானத்தை கொண்டு சென்றமை குற்றமாகும்.

அதற்கமைய தனிமைப்படுத்தல் விதி மீறல்களுக்கமைய பொலிஸாரால் இந்த கைது முன்னெடுக்கப்பட்டுள்ளது. வாழைச்சேனை பொலிஸார் மேலதி விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

தினக்கூலி இழந்து பட்டினியால் தவிக்கும் வவுனியா கற்குளம் மக்கள்!

முடக்கப்பட்ட பகுதியிலிருந்து வெளியேறியவர்களுக்கு விளக்கமறியல்