செய்திகள் பிந்திய செய்திகள்

வாழ்க்கை சுமையே போதைப் பொருள் பாவனைக்கு காரணம் – மஹிந்த

வாழ்க்கை சுமை அதிகரித்தமையினால் நடுத்தர மக்கள் இன்று போதைப்பொருள் வியாபாரத்திற்கும், போதைப்பொருள் பாவனைக்கும் அடிமையாகியுள்ளனர் என்று பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பண்டாரகமவில் நேற்று (03) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும்,

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் போதைப்பொருள் வியாபாரத்திற்கும் பாவனைக்கும் அடிமையாகியுள்ளார்கள். இதற்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும். மக்களின் வாழ்க்கை செலவுகள் அதிகரிக்கும் போது வாழ்வதற்காக நடுத்தர மக்கள் தவறான வியாபாரங்களை புரிந்துள்ளார்கள்.

எனவே நவம்பர் 17ம் திகதிக்கு பின்னர் போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும், போதைப்பொருள் உற்பத்தியாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது சிறந்ததாகும். தேசிய பாதுகாப்பும், சட்டம் ஒழுங்கும் முறையாக நிலைநாட்டப்படும். வீழ்ச்சியடைந்துள்ள கலாசாரம் மீண்டும் கட்டியெழுப்பப்படும் – என்றார்.

Related posts

சஜித்தின் விஞ்ஞாபனம் 31ம் திகதி

G. Pragas

கோத்தாபய தப்பித்து ஓட முடியாது- சுமந்திரன்

Tharani

யானை இல்லையேல் ஐதேக தனித்து போட்டி; சஜித் – ரணில் முறுகல் உச்சம் தொட்டது?

G. Pragas