செய்திகள் பிரதான செய்தி

விகாரைக்குள் குண்டுகள் வைத்திருந்த சுமன தேரருக்கு ஆயுள் தண்டனை!

விகாரைக்குள் ஆயுதங்கள் மற்றும் குண்டுகளை வைத்திருந்த ஊவதென்ன சுமன தேரருக்கு ஆயுள் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (01) 10 ஆண்டுகளின் பின்னர் தீர்ப்பளித்துள்ளது.

2010ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு சில நாட்கள் முன்னர் மாளிகாவத்தையில் உள்ள ஸ்ரீ போதிரஜராம விகாரையில் 50 கைக்குண்டுகள், இரண்டு ரி-56 துப்பாக்கிகள் மற்றும் 210 தோட்டாக்கள் என்பன மீட்கப்பட்டன.

இந்நிலையிலேயே அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

சுமன தேரர், மாவெல சுபோத தேரர், சந்தகம் சுப்ரமணியம், கே.தமிழ்ச்செல்வன் மற்றும் பி.ராஜபாலன் ஆகிய ஐவருக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டது.

2018ம் ஆண்டு சுப்ரமணியம், தமிழ்ச்செல்வன் மற்றும் ராஜபாலன் ஆகிய மூவரையும், அவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் வழக்கை தொடர போதுமானதல்ல என்று தெரிவித்து கொழும்பு மேல் நீதிமன்றம் விடுவித்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொத்தமல்லி, இஞ்சி, மரமஞ்சள் இறக்குமதி செய்ய தீர்மானம்

Tharani

மீன்ரின்களை பதுக்கி “கையும் கழவுமாக” பிடிபட்ட சதொச நிலையம்

G. Pragas

முல்லையில் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின

Tharani