செய்திகள் பிரதான செய்தி விளையாட்டு

விசேட விசாரணை பிரிவில் அரவிந்த முன்னிலை!

2011ம் ஆண்டு இடம்பெற்ற உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் இடம்பெற்றதாக முன்வைக்கப்பட்ட ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்காக இலங்கை அணியின் முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வா விளையாட்டத்துறை அமைச்சின் விசேட பொலிஸ் விசாரணை பிரிவில் இன்று (30) சற்றுமுன்னர் முன்னிலையாகியுள்ளார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 2011 உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக ஜூன் 18 அன்று முன்னாள் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருந்தார்.

இந்த குற்றச்சாட்டு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இது தொடர்பிலேயே அவர் வாக்குமூலம் வழங்கச் சென்றுள்ளார்.

Related posts

மணல் அகழ்பவர்களை கைது செய்து மன்றில் நிறுத்துங்கள்: சுமந்திரன்

Tharani

விண்கல்லால் கொரோனா வந்தது – பேராசிரியர் சந்திர

Bavan

யாழ் வாசிகள் 9 பேர் குணமடைந்தனர்!

G. Pragas