சினிமா செய்திகள்

விஜயை கிண்டலடித்த நடிகர்; நாகரிகமாக கையாண்ட தனுஸ்!

தனுஷ், மஞ்சுவாரியர் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரித்த அசுரன் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தனுஷ் படங்களிலேயே இந்தப் படம்தான் அதிக வசூல் செய்த படம் என்பது மட்டுமன்றி அனைத்து ஊடகங்களும் இந்த படத்தை பாராட்டி கொண்டாடின.

இந்த நிலையில் இந்த படம் 100 நாட்கள் என்ற மைல் கல்லை தொட்டுள்ளது. தற்போதைய டிஜிட்டல் உலகில் ஒரு திரைப்படம் இரண்டு வாரங்கள் ஓடுவது என்பதே பெரிய விடயம் என்ற நிலையில் அசுரன் திரைப்படம் 100 நாட்கள் ஓடியிருப்பது என்பது மிக அரிதான ஒரு நிகழ்வாகும். அந்த வகையில் இந்த நூறாவது நாள் விழாவை இன்று படக்குழுவினர் கொண்டாடினார்.

இந்த விழா மிகவும் சிறப்பாக நடந்து கொண்டிருந்தாலும் இந்த படத்தில் நடித்த ஒரு பிரபலம் மேடையில் பேசிய போது விஜய் நடித்த ’குருவி’ திரைப்படம் தான் கடைசியாக 150-வது நாள் விழா கொண்டாடப்பட்டதாகவும், ஆனால் அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை என்றும் கிண்டலாக கூறினார். இவருடைய பேச்சால் மேடையில் சலசலப்பு ஏற்பட்டது.

இதனை அடுத்து பேச வந்த நடிகர் தனுஷ் ஒரு விழா என்றால் அதில் நாம் பேசுவது மட்டும் தான் நம்மால் கட்டுப்படுத்த முடியும். மற்றவர்கள் பேசுவதை கட்டுப்படுத்த முடியாது. எனவே இந்த விழாவில் நடந்த நல்லவற்றை எடுத்துக் கொள்ளுங்கள், மற்றவற்றை விட்டு விடுங்கள் என்று நாகரீகமாக பேசி, விஜய் படம் கிண்டலடிக்கப்பட்ட பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். தனுஷின் இந்த பண்பு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

Related posts

கோத்தாவை பகிரங்க விவாதத்துக்கு அழைத்தார் ஹிருணிகா

G. Pragas

சஜித்தின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மின் தடை

G. Pragas

சப்ரகமுவ மாகாணத்திற்கு ஆசிரியர்கள் நியமனம்?

reka sivalingam

Leave a Comment