செய்திகள் பிரதான செய்தி

விஞ்ஞாபனம் வெளியிட்ட பின்னர் சவாலுக்கு வரத் தயார்

ஜனதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஜனநாயக தேசிய முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச முன்வைத்த நேரடி விவாத சவாலை ஏற்கத் தயார் என்று நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அண்மையில் கோத்தாபய ராஜபக்ஷ விவாதத்திற்கு வருவதற்கு பயம் என்றால் மஹிந்த ராஜபக்ஷவை அழைத்து வாருங்கள் அதுவும் இல்லை எனில் பசில், நாமல், சிராந்தி அல்லது 1000 பேரை என அனைவரையும் அழைத்து வருமாறு சஜித் பிரேமதாச தெரிவித்திருந்தார்.

சஜித் பிரேமதாசவின் குறித்த காணொளியை பகிர்ந்து, இந்த சவாலை தான் ஏற்றுக்கொளவதாக நாமல் ராஜபக்ஷ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் மேலும்,

சஜித் பிரேமதாசவுடன் விவாதத்திற்கு வருவதற்கு கோத்தாபயவிற்கு ஒரு பிரச்சினையும் இல்லை. உங்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்ட பின்னர் விவாதத்தை நடத்துவது சிறந்தது. அதுவரை நீங்கள் இப்போது ஒரு விவாதத்தை வலியுறுத்தினால், நான் தயாராக இருக்கிறேன் – என்றுள்ளார்.

Related posts

வர்த்தக நிலையத்தில் உருக்குலைந்த சடலங்கள் மீட்பு!

Tharani

கிழக்கின் நிர்வாகத்தை பாதுகாக்க கோத்தாவை ஆதரிக்க வேண்டும்

G. Pragas

நாளை முதல் நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்!

G. Pragas