in

விடாமல் மிரட்டுகிறது தென்னாபிரிக்கா; இலக்கை நிர்ணயிக்க போராடுகிறது இலங்கை!

சுற்றுலா இலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரு போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி ஜொகனஸ்பேர்கில் நேற்று (3) ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

இந்தப்போட்டியில் இலங்கை அணி தோல்வியின் விளிம்பில் தத்தளித்து வெற்றியிலக்கை நிர்ணயிக்க போராடி வருகின்றது

போட்டியில் தமது முதல் இன்னிங்ஸில் ஆடிய இலங்கை அணி வெறும் 157 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தது. துடுப்பாட்டத்தில் அதிகபட்சம் குசல் பெரேரா (60), டி.சில்வா (29) ஓட்டங்களை பெற்றுக் கொடுக்க, தென்னாபிரிக்கவின் பந்துவீச்சில் அன்ரிஜ் நோர்த்ஜே (56/6), வியான் முல்டர் (25/3) விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர்

இந்நிலையில் தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்து ஆடிய தென்னாபிரிக்க அணி சகல விக்கெட்களையும் இழந்து 302 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில் டியன் எல்கர் (127), ரஸ்ஸி வான் டேர் டஸ்ஸன் (67) ஓட்டங்களை பெற்றனர். அணியின் ஏனைய வீரர்கள் சோபிக்கவில்லை. இலங்கையின் பந்துவீச்சில் விஷ்வ பெர்னாண்டோ (101/5), டசுன் ஷானக (42/2), அஷித பெர்னாண்டோ (61/2) விக்கெட்களை கைப்பற்றிக் கொண்டனர்.

இந்நிலையில் வெற்றியிலக்கை நிர்ணயிக்க போராடும் இலங்கை அணி இன்றை ஆட்ட நாள் நிறைவில் 4 விக்கெட்களை இழந்து 150 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது. துடுப்பாட்டத்தில் திமுத் கருணாரத்ன (91*) ஓட்டங்களை பெற்றுள்ளதுடன், தென்னாபிரிக்கவின் பந்துவீச்சில் லுங்கி நெகிடி (26/3) விக்கெட்களை சாய்த்துள்ளார்.

ஆட்டோவில் சென்றோர் மீது அசிட் வீச்சு; பெண்கள் உட்பட மூவர் படுகாயம்!

ரத்ன தேரர் நாளை எம்பியாக பதவிப்பிரமாணம்!