in , ,

விடுதலைப் புலிகளை புகழ்ந்து பதிவிட்ட திருகோணமலை இளைஞன் கைது!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினை போற்றி, சமூக ஊடகங்களில் பதிவிட்ட குற்றச்சாட்டில் திருகோணமலையில் 24 வயதான இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் அவர் நேற்று (02) கைது செய்யப்பட்டார் என்று பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இன்று (03) தெரிவித்தார்.

முச்சக்கர வண்டி சாரதியான அவர், தேசிய ஒற்றுமையைச் சீர்குலைக்கும் வகையிலான பதிவுகளை பதிவிட்டுள்ளார் என்றும் அவர் கூறினார்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், கைதான சந்தேக நபரை நீதிமன்றில் இன்று (03) முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

சிறுமி விற்பனை; சிக்கும் முக்கிய புள்ளிகள்..!

சிறுமி விவகாரம்: உப தவிசாளரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்