கிளிநொச்சி செய்திகள் பிந்திய செய்திகள்

விடுதலை புலிகள் கட்சி கோத்தாவுக்கு ஆதரவு!

12 ஆயிரம் போராளிகளை விடுவித்த நன்றிக்காக மொட்டுக் கட்சியை ஆதரிக்கின்றோம் என்று புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலை புலிகள் கட்சி தலைவர் க.இன்பராசா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும்,

கடந்த ஆட்சியில் 12 ஆயிரம் போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் எதையும் அவர்கள் செய்யவில்லை. சாதாரணமாக அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனை விடுதலை செய்வதாக கூறப்பட்ட போதிலும் அவரைகூட இவர்களால் விடுதலை செய்ய முடியவில்லை. அரசியல் கைதிகள் தொடர்ந்தும் சிறைகளிலேயே வாழ்கின்றனர்.

எனவே அனைவரும் மொட்டுக்கு வாக்களிப்போம். அவர்கள் எம்மை அழிக்கட்டும் அல்லது சிறையிலுள்ள 132க்கு மேற்பட்ட அரசியல் கைதிகளை விடுதலை செய்யட்டும். – என்றார்.

Related posts

பத்தேகம பிரதேச சபை தலைவர் கைது

G. Pragas

நிறைவேற்று அதிகார ஒழிப்பு யோசனை கைவிடப்பட்டது!

G. Pragas

அதிரடி சுற்றிவளைப்பு – போதைப் பொருளுடன் 100 பேர் கைது!

G. Pragas

Leave a Comment