in , ,

விடுவிக்கப்பட்டும் பாற்பண்ணை கிராமம் முடக்கத்தில்!

திருநெல்வேலியில் கொரோனா கண்காணிப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட பாற்பண்ணை பகுதி இன்று காலை முதல் விடுவிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட போதிலும் குறித்த இன்றைய தினம் மதியம் வரையில் விடுவிக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

அங்கு இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் காவல் கடமைகளில் ஈடுபட்டு உள்ளத்துடன், வேலைக்கு செல்வோர் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு செல்வோருக்கு மட்டுமே பிரதேசத்தில் இருந்து வெளியேற அனுமதிக்கின்றனர்.

இதேவேளை காவல் கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸார் மற்றும் இராணுவத்தினரிடம் கேட்ட போது தமக்கு இப்பகுதி விடுவிக்கப்படுவதாக எவ்வித அறிவித்தலும் கிடைக்கவில்லை என தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலரின் விற்பனை விலையில் மாற்றம்!

அரச நிர்வாகம் பலவீனமடைந்துள்ளது – ஆனந்த தேரர்