சினிமா செய்திகள்

விதிமீறும் வத்திக்குச்சி வனிதா

பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து வனிதா விஜயகுமார் விதிகளை மீறி வருகிறார்.சிலசமயத்தில் அது பிக்பாஸ் வீடா இல்லை வனிதா வீடா என்ற சந்தேகமே வரும் அளவுக்குசர்வாதிகாரி மாதிரி, அங்கு ஆட்சி செய்து வருகிறார் வனிதா. மற்ற போட்டியாளர்கள்யாரையும் பேச விடுவதில்லை. தனது பேச்சையே அனைவரும் கேட்க வேண்டும் என அவர் நினைக்கிறார்.

இந்நிலையில் மக்களால் வெளியேற்றப்பட்ட வனிதாவை மீண்டும் வைல்ட் கார்ட் மூலம் போட்டியாளர் ஆக்கி விட்டார் பிக்பாஸ். இதனால் முன்பை விட அதிகம் பிரச்சினை செய்து வருகிறார் வனிதா.மற்றவர்களின் அழுகை, சிரிப்பு என எல்லாவற்றிலும் மூக்கை நுழைத்து அதில் ஒருபிரச்சினையை ஏற்படுத்தி வருகிறார். ஆனால், அவரை பிக்பாஸ் தட்டிக் கேட்பதே இல்லை.

முன்பு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் முன்னரே ஒருமுறை மைக்கை கழற்றி வீசினார் வனிதா. அதேபோல், அடிக்கடி மைக்கை ஆப் செய்து வைத்து விடுவேன் என ஊடகங்களுக்கு அளித்த பேட்டியிலும் கூறி இருக்கிறார். தற்போதும் அதே போல், கவினுடனான சண்டையில் மீண்டும்மைக்கை கழட்டி கேமரா மீது மாட்டி விட்டார்.

தொடர்ந்து இப்படி விதிகளை மீறி வரும் வனிதாவை பிக் பாஸ் கண்டிக்க வேண்டும். அவரை உடனடியாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பது தான் ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது. பார்ப்போம் பிக் பாஸ் என்ன செய்கிறார் என்று.

Related posts

கொரோனா பலியெடுப்பு ‘265,084’ ஆக உயர்ந்தது!

G. Pragas

கொரோனா வைரஸ்; சீன ஜனாதிபதி வட கொரியாவுக்கு உதவ தயாராம்!

Bavan

இராணுவத்துக்கு சவாலாக இருந்த குருபரனுக்கு தடை!

G. Pragas