in ,

வினை விதைத்­தால்…!| சனிக்கிழமை | 23.01.2021 |

ஆசிரியர் தலையங்கம்

‘தனக்­குத் தனக்கு என்­றால் சுளகு படக்­குப்­ப­டக்கு என்று அடிக்­கு­மாம்’ இது தமிழ்க் கிரா­மங்­க­ளில் வழக்­கி­லுள்ள ஒரு பழ­மொழி. மற்­ற­வர்­க­ளுக்­குப் பிரச்­சி­னை­கள் வரும்­போது ‘அது எம்­மைப் பாதிக்­காத வரை­யில் நமக்­கென்ன?’ என்று கண்­டும்­கா­ணாது அலட்­சி­யம் காட்­டு­ப­வர்­கள், பல­வே­ளை­க­ளில் அந்­தப் பிரச்­சி­னை­களை உரு­வாக்­கும் நபர்­க­ளு­டன் சுய­ந­ல­நோக்­கில் தாமும் பங்­கா­ளி­க­ளா­கச் செயற்­ப­டு­வர்.

ஆனால் அதே நபர்­க­ளால் தமக்­கும் அதே பிரச்­சினை ஏற்­ப­டும்­போது எப்­ப­டித் துடிப்­பார்­கள்? எப்­ப­டிப் பட­ப­டப்­பார்­கள்? என்­ப­தற்கு, முன்­னாள் அமைச்­ச­ரும் இப்­போ­தைய நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரிஷாத் பதி­யு­தீன் சிறந்த உதா­ர­ணம்.

இன்­றைய பொது­ஜன பெர­மு­ன­வின் ஆட்­சி­யில் சிறு­பான்மை இன மக்­கள் வேத­னை­யின் உச்­சக்­கட்­டத்­தில் வாழ்­வதை உல­க­றி­யும். இந்த ஆட்­சி­யில் சிறு­பான்­மை­யி­னத்­த­வர் மீதான அடக்கு முறை­கள் என்­று­மில்­லா­த­வ­கை­யில் அதி­க­ரித்­து­விட்­டன என்று உணர்­வா­வே­சக்­கு­ரல் எழுப்­பும் ரிஷாத் பதி­யு­தீன், தானும் ஒரு சிறு­பான்மை இனத்­தைச் சேர்ந்­த­வர் என்­பதை இப்­போ­தா­வது புரிந்து கொண்­டுள்­ளார் என்­பது நிறை­வு­த­ரும் விட­யமே.

அதை அவரை உணர வைத்­துள்ள ராஜ­பக்ச அணி­யி­ன­ருக்கு அவர் நன்றி சொல்­லத்­தான் வேண்­டும்.கடந்த காலங்­க­ளில் ஆட்­சிப் பொறுப்­பில் இருந்த பேரி­ன­வா­தக் கட்­சி­க­ளு­டன் அமைச்­சுப் பத­வி­களை வகித்து அதி­கா­ரம் செய்து, அர­சி­யல் நகர்­வு­களை முன்­னெ­டுத்த காலங்­க­ளில் ரிஷாத் பதி­யு­தீன் ஆளும் பேரி­ன­வாத சமூ­கத்­தின் பிரிக்க முடி­யாத ஓர் உறுப்­பி­ன­ரா­கவே தன்னை இனம்­காட்டி செயற்­பட்­டார் என்­பதை உல­க­றி­யும்.

கால­மாற்­றமோ, அர­சி­யல் சூழல் மாற்­றமோ ஈஸ்­டர் தாக்­கு­த­லின் பின்­ன­ரான நிகழ்­வு­கள், ஒட்­டு­மொத்த இஸ்­லா­மிய இனத்­த­வ­ரையே குற்­ற­வா­ளி­க­ளா­கப் பார்க்க வைத்­தன. பௌத்த சிங்­க­ளப் பேரி­ன­வா­தம் எத்­த­கைய கொடூ­ர­மா­னது என்­பதை முஸ்­லிம்­கள் புரிந்து கொள்­ளக்கூடிய சூழல் உரு­வா­னதை ஒரு காலத்­தி­ருப்­ப­மென்றே சொல்­ல­லாம்.

இஸ்­லா­மிய, மலை­ய­கத் தமி­ழர்­க­ளின் பின்­புல ஆத­ர­வு­டன் அது­வரை ஆட்­சிப்­பீட அதி­கா­ரத்­தைக் கைப்­பற்­றிய வர­லாற்­றைக் கொண்­ட­வர்­களை, நடந்து முடிந்த தேர்­த­லில் தன்­னந்­த­னி­யான அறு­திப்­ப­லத்­து­டன் பெரும்­பான்­மை­யி­னத்­த­வர்­கள் ஆட்சிப் பீட­மேற்­றி­னர்.

அத­னால் இனி­மே­லும் சிறு­பான்­மை­யி­னரை ஆட்­சி­ய­மைக்க நம்­பிக்­கொண்­டி­ருக்­கத் தேவை­யில்லை என்ற நிலை உரு­வா­கி­விட்­ட­தா­லேயே தொடர்ந்­தும் முஸ்­லிம்­கள் மீதான ஒடுக்­கு­தல்­கள் தொடர்­கின்­றன.

ராஜ­பக்­சக்­க­ளின் ஆட்சி வெளிப்­ப­டை­யா­கவே தனிப் பௌத்த சிங்­கள ஆட்­சி­யாக உத்­தி­யோகபூர்­வ­மற்­ற­ வ­கை­யில் தம்­மைப் பிர­க­ட­னப்­ப­டுத்­திக் கொண்­ட­போது, இந்த நாட்­டில் பெரும்­பான்மை இன­மத அடை­யா­ளத்தை கொண்­டி­ரா­த­வர்­கள் அனை­வ­ருமே சிறு­பான்­மைத் தமி­ழ­ரா­கவே முத்­திரை குத்­தப்­பட்­ட­னர்.

போர்க்­கா­லத்­தில் இஸ்­லா­மிய சகோ­த­ரர்­க­ளில் பெரும்­பான்­மை­யோர் தாம் பேரி­ன­வாத ஆதிக்­க சக்­தி­க­ளின் செல்­லப்­பிள்­ளை­க­ளாக நினைத்­துப் பத­விக் கதி­ரை­க­ளில் அயர்ந்து தூங்­கி­னர். தமி­ழர்­கள் மீது மேற்­கொள்­ளப்­பட்ட அனைத்­துக் கொடு­மை­க­ளை­யும் பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­யாக அர்த்­தப்­ப­டுத்தி அர­சுக்கு, மௌன­மா­கத் தலை­ய­சைப்பு அங்­கீ­கா­ரத்தை வழங்கி வந்­த­னர் என்­பது வர­லாறு.

தமி­ழர்­க­ளைப் பிரித்­தா­ளும் பேரி­ன­வா­தத் தந்­தி­ரோ­பாய நிலையை ஆத­ரித்­த­தன் விளைவை இஸ்­லா­மி­யச் சகோ­த­ரர்­கள் இப்­போது அனு­ப­விப்­ப­தோடு அத­னைக் கண்­கூ­டா­கப்­பார்க்­கும்­போது தான், அந்த நிலை­மை­யின் ஆபத்­தை­யும் அவர்­க­ளால் புரிந்­து­கொள்ள முடி­கி­றது.

அரசு சிறு­பான்மை மக்­க­ளுக்கு எதி­ரா­கச் செய்­யும் அனைத்­துச் செயற்­பா­டு­க­ளும் இஸ்­லா­மிய இனத்­த­வ­ரை­யும் என்­றைக்­கா­வது ஏதோ ஒரு விதத்­தில் பாதிக்­கவே செய்­யும் என்ற உண்­மையை உணர்ந்துகொள்­வ­தும் ஒரு வர­லாற்­றுத் தேவை­யா­கும். இந்த நிலை­யில் சிறு­பான்மை இனத்­த­வர்­க­ளின் தலை­வர்­கள் என்று கூறிக் கொள்­வோர் தமது அர­சி­யல் சுய­ந­லன்­க­ளுக்­கப்­பால் ஒன்­று­பட்­டுத் தமது உரி­மை­கள், விட­யங்­க­ளில் ஒரு­மித்த சிந்­த­னை­யு­டன் செயற்­ப­ட­வேண்­டும்.

இல்­லா­து­வி­டின் சிறு­பான்மை மக்­கள் அனை­வ­ரது சுதந்­திர இருப்பு என்­பது இந்த நாட்­டில் கேள்­விக்­கு­றி­யா­கி­வி­டும். சிறு­பான்மை இனத்­த­வர்­க­ளின் உரி­மை­களைப் பாது­காக்­க­வும் வேத­னை­க­ளைத் தீர்க்­க­வும் இன, மத அடிப்­ப­டை­யி­லான கட்­சி­க­ளின் அர­சி­யல் நகர்­வு­கள் ஒரு­போ­தும் உத­வப் போவ­தில்லை.

அதற்­கப்­பால் தமிழ் பேசும் சிறு­பான்மை இனத்­த­வ­ரின் உரி­மை­க­ளை­யும், தீர்­வு­க­ளை­யும் அர­சி­யல் போராட்ட நகர்­வு­க­ளின் மூலமே வென்­றெ­டுக்க முடி­யும். ரிஷாத் பதி­யு­தீன் போன்­ற­வர்­கள் இதனை அவர் சார்ந்த சமூ­கத்­த­வர்­க­ளுக்கு உணர்த்த வேண்­டிய காலம் இது­வே­யா­கும்.

பிசிஆர் சோதனையிலும் பவித்ராவுக்கு உறுதியானது!

கந்தரோடையில் அரச மரம் தொடர்பில் இராணுவப் பெயரில் விசாரணை!