செய்திகள் பிந்திய செய்திகள்

விபத்தில் ஒருவர் பலி!

ஹபரணை – பொலன்னறுவை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

நேற்று இரவு இடம்பெற்ற இச் சம்பவத்தில் சிறிய பாரவூர்தியொன்று, டிப்பர் ரக வாகனத்தை முந்தி செல்ல முற்பட்ட போது விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் பாரவூர்தியின் சாரதியும், உதவியாளரும் படுகாயமடைந்து பொலன்னறுவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் சாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

மணியம் தோட்டக் கொலை; தந்தை மகனுக்கு மறியல்

G. Pragas

அப்பிளில் இனிமேல் புதிய இயங்குதளம்

G. Pragas

இலங்கை அணியை தோற்கடித்தது பாகிஸ்தான்

G. Pragas

Leave a Comment