செய்திகள்

விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சிறுவர்கள் பலி!

வீரகொட்டிய – தங்கல்ல வீதியில் இடம்பெற்ற விபத்தில் இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சிறுவர்கள் இருவரும் அவர்களுடைய தாயுடன் பேருந்தில் இருந்து இறங்கி பாதையில் சென்று கொண்டிருந்தபோது பேருந்தின் பின்னால் வந்த மோட்டார் வாகனமொன்று அவர்கள் மீது மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த மூவரும் வீரகெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக தங்கல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது மகள் உயிரிழந்துள்ளதுடன், தாய் மற்றும் மகன் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் மகன் உயிரிழந்துள்ளார்.

12 வயதுடைய மகளும் 6 வயதுடைய மகனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, 15 வயதுடைய சிறுவன் ஒருவனே குறித்த மோட்டார் வாகனத்தை செலுத்தியுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக மோட்டார் வாகனத்தில் பயணித்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

ரஷ்யாவில் இருந்து 261 மாணவர்கள் நாடு திரும்பினர்

கதிர்

வரலாற்றில் இன்று : டிசம்பர் 02

Tharani

பேருந்துக்குள் வைத்து ஒருவர் சுட்டுக்கொலை!

G. Pragas