செய்திகள் முல்லைத்தீவு

விபத்தில் காயமடைந்த இளைஞன் பலி!

முல்லைத்தீவு – முள்ளியவளை பிரதேசத்தினை சேர்ந்த இளைஞன் ஒருவர் விபத்தின் போது படுகாமடைந்து யாழ் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துளார்.

முள்ளியவளை சேர்ந்த தனுசியன் (23-வயது) என்ற இளைஞன் கடந்த வாரம் கோடாலிக்கல் – நெடுங்கேணி வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மாட்டுடன் மோதி படுகாயமடைந்த நிலையில் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

போதைப்பொருள் சம்பவங்களை அறிவிக்க தொலைபேசி இலக்கம்

reka sivalingam

இரண்டு தங்க சிலைகளுடன் ஒருவர் கைது!

reka sivalingam

முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம் (படங்கள்)

G. Pragas