செய்திகள் பிந்திய செய்திகள்

விபத்தில் காயமடைந்த வேட்பாளர் சாவு!

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் அண்மையில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சுயேச்சை குழு வேட்பாளர் யோ.பியதர்ஷன் என்பவர் சிகிச்சை பலனின்றி, நேற்று முன் தினம் (15) இரவு உயிரிழந்துள்ளார்.

தேர்தல் நடவடிக்கைக்காக ஜூலை 06ம் திகதியன்று, சுயேச்சை குழு 03ன் தலைவரான சுந்தரலிங்கம் செல்வகுமார், வேட்பாளரான யோ.பியதர்ஷன் உள்ளிட்ட மூவர், கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணத்துக்குச் சென்று, மீண்டும் கிளிநொச்சி நோக்கி சென்று கொண்டிருந்த போது, அவர்கள் பயணித்த முச்சக்கரவண்டி, டிப்பர் ஒன்று மோதியதில் விபத்துக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கடவுள் புண்ணியத்தில் நான் தப்பிவிட்டேன் – மகிந்த

கதிர்

பதுளை பகுதியில் சுற்றுலா விடுதி இடிந்தது; மூவர் காயம்

reka sivalingam

சட்டவிரோத வலைகள் கைப்பற்றல்; இருவர் கைது!

G. Pragas