in ,

விபத்தில் மாணவி உயிரிழப்பு!

உயர்தரம் கற்பதற்கு அனுமதி பெற வந்த மாணவி விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளாா் என்று பொலிஸாா் தெரிவித்துள்ளனா்.
திருவாசகம் மதுசாளினி( வயது 17 )என்ற மாணவியே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளாா். அத்துடன் மற்றுமொரு மாணவி காயமடைந்துள்ளாா் என்று கிளிநொச்சி பொலிஸாா் தெரிவித்துள்ளனா்.
இந்தச் சம்பவம் இன்று காலை 8.15 மணிக்கு கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கிளிநொச்சி ஊற்றுப்புலம் பாடசாலையில் க.பொ.த சாதாரண தரம் கல்வி கற்றமாணவிகள் மூவர் உயர்தரம் கல்விக்காக கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு அனுமதி பெறுவதற்காக பாடசாலைக்கு வருகை தந்த போது இந்த விபத்து
ஏற்பட்டுள்ளது.
ஏ-9 வீதியில் மேற்கு பக்கத்திலிருந்து பாடசாலை பக்கமாக மஞ்சட்கடவையில் வீதியைக் கடக்க முற்பட்ட போது ஏ-9 வீதியில் பயணித்த பட்டாரக வாகனம் மாணவிகள் கடந்து செல்வதற்காக நிறுத்தியது. இதன்பின் வந்த
மின்சார சபை ஒப்பந்தகாரருடைய ஹன்ரர் ரக வாகனமும் நிறுத்தியிருந்த போது பின்னால் வந்த இலங்கைப் போக்குவரத்து சபையின் பஸ், ஹன்ரர் ரக வாகனத்தை
மோதியதி்ல் ஹன்ரர் வாகனம் பட்டாவுடன் மோதியது.
குறித்த வாகனங்கள் இரண்டும் மாணவிகளுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த மாணவியின் தந்தை துவிச்சக்கர வண்டியில் நாளாந்தம்
ஊற்றுப்புலத்திலிருந்து கிளிநொச்சி வரை விறகு வெட்டி விற்பனை செய்யும் தொழிலாளியாவா். மிகவும் வறுமைக்குட்பட்ட நிலையில் தனது மகளை உயர்தரம் வரைக்கும் கற்பித்து அனுப்பிய நிலையில் முதல் நாளே பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றனர்.

ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் இலங்கைக்குத் திடீர் வருகை!

போதியளவு எரிபொருள் யாழ்ப்பாணத்தில்!