செய்திகள்

விபத்தில் மூன்று மாணவிகள் உட்பட நால்வர் படுகாயம்!

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். இன்று (07) காலை பெயார்வெல் என்ற இடத்தில் இந்த விபத்து இடம்பெற்றது.

தலவாக்கலையிலிருந்து பாடசாலை மாணவிகளை ஏற்றிக் கொண்டு நுவரெலியா பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்றும், லிந்துலையிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி சென்ற பாடசாலை சேவை பேருந்தொன்றும் நேர்க்கு நேர் மோதியமையினாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் வாகனத்தின் சாரதி உள்ளிட்ட மூன்று மாணவிகள் படுகாயங்களுக்கு உள்ளாகி லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

துஷ்பிரயாேக வழக்கு; ஆசிரியருக்கு பிணை!

reka sivalingam

உருவாகிறது அரண்மனை-3; இம்முறை ஆர்யாவுடன் சுந்தர்.சி!

Bavan

ஐக்கிய தேசிய முன்னணியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

G. Pragas