கிழக்கு மாகாணம் செய்திகள் பிந்திய செய்திகள்

விபத்தை ஏற்படுத்தி மாயமான வாகனம் கைப்பற்றல்

மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையின் மாவடிவேம்பு பிரதேசத்தில் வீதி விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற வாகனத்தை பொலிஸார் அம்பாறையில் கைப்பற்றியுள்ளதுடன், சாரதியை கல்லடியில் கைது செய்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை மாலை மாவடிவேம்பில் வீதிக்கட்டுப்பாடுகளை மீறி குறித்த கார் பயணித்த வேளை, அந்த காரில் மோதி விபத்துக்குள்ளாகியிருந்த குடும்பஸ்தர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்திருந்தார்.

மேலும், கட்டுப்பாட்டை மீறிய அந்த வாகனம் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த இலங்கைப் போக்குவரத்துச் சபை பயணிகள் பேருந்தையும் மோதி சேதப்படுத்திச் சென்றதாக கூறப்பட்டது.

இவ்விரு சம்பவங்களிலும் சம்பந்தப்பட்ட வாகனம் மாயமாய் மறைந்திருந்தவேளை, பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். இந்நிலையிலேயே குறித்த வாகனம் அம்பாறையில் கைப்பற்றப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

பாம்பு தீண்டி மாணவி கவலைக்கிடம்

Tharani

கொரோனா வைரஸ் பற்றி மீம்; சர்ச்சையில் பிரபல நடிகர்!

Bavan

இரணைமடுக் குளத்தினை விஸ்தரிப்பு! பாதீட்டு திட்டத்தில் நிதி

Tharani