செய்திகள்

விமல் உள்ளிட்டோரின் வழக்கு ஒத்திவைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உள்ளிட்ட 6 சந்தேக நபர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய குறித்த வழக்கு விசாரணைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17ம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன இன்று (04) உத்தரவிட்டுள்ளார்.

ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹூசைனின் இலங்கை விஜயத்தின்போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2016 பெப்ரவரி 6ம் திகதி கொழும்பு – 7 பௌத்தாலோக மாவத்தையிலுள்ள ஹெவ்லோக் வீதியை மறித்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக சந்தேகநபர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

Related posts

வவுனியாவில் கஞ்சாவுடன் மூவர் கைது!

reka sivalingam

கண்காணிப்பு கமெராக்கள் வழங்கல்

G. Pragas

புதிய ரயில் பெட்டிகள் ரயில்வே திணைக்களத்திடம் கையளிப்பு

கதிர்