in ,

விமல் வீரவன்சவின் நாய்க்கு மாதம் ரூ.ஐயாயிரம் செலவு!

விமல் வீரவன்சவின் வீட்டு நாய்க்கு கூட மாதம் 5000 ரூபாய்க்கு மேல் செலவாகிறது. ஆனால் இவர் கொழும்பு மக்களை அவமரியாதை செய்கிறார் என்று மனோ கணேசன் எம்பி உறுதிபட தெரிவித்துள்ளார்.

இன்று எதிர்க்கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார். மேலும்,

“விமல் வீரவன்ச என்னை முட்டாள் எனத் தெரிவித்தார். இவரைப் போன்ற அதிபுத்திசாலி அமைச்சர்கள் அரசாங்கத்தில் இருக்கும் போது நான் முட்டாளாக இருப்பது எனக்கு பெருமையே.

விமல் வீரவன்சவின் வீட்டில் வளர்க்கப்படும் நாய்க்குட்டிக்கு கூட மாதம் 5000 ரூபாய்க்கு மேல் செலவாகின்றது. இதுவே உண்மை. ஆனால் இவர் தன்னை தெரிவு செய்த கொழும்பு மாவட்ட மக்களை அவமரியாதை செய்துள்ளார்.

இவரது தலைமீது முடியுள்ளது. உள்ளே எல்லாம் காலியாகவுள்ளது. மாகாணசபை உறுப்பினராக இருந்த போது துவிச்சக்கர வண்டியில் வந்தவர் இன்று பெரும் கோடீஸ்வரராகிவிட்டார். இவருக்கு பணம் எப்படி வந்தது என்பதனை ஆராய வேண்டும், எத்தனை பாஸ்போட் வைத்துள்ளார். சொத்துக்களின் மதிப்பு என்னவென்று மக்கள் இப்போது கேட்க தொடங்கியுள்னர்.

மக்களின் கஷ்ட நிலை புரியவில்லை. வெட்ககேடு தனது கட்சிக்கும் தலைவருக்கும் கொள்கைக்கும் துரோகம் செய்யும் படுதுரோகி இவர்தான். என்னைபார்த்து முட்டாள் என கூறுகிறார். இது எனக்கு கோபமில்லை. ஆனால் தன்னை தெரிவு செய்த மக்களை கொழும்பு மாவட்ட மக்களுக்கு அவர் செய்யும் துரோகத்திற்கு மக்கள் அடுத்த முறை தூக்கி எறிவார்கள்” – என்றார்.

அன்ரனிபுரத்தில் எறிகணைகள் மீட்பு!

அலரிமாளிகை மூடப்படவில்லை!