விருமன் பட ‘மதுரவீரன் அழகுல’ பாடல்: ராஜலட்சுமிக்கு பதிலாக அதிதி

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் திரைப்படம் ‘விருமன்’.

இந்தப் படத்தில் அதிதி சங்கர், சூரி, பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்தப் படம் நாளை (12) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் யுவன் சங்கர்ராஜா– அதிதி குரலில் இந்தப் படத்தின் இரண்டாம் பாடலான ‘மதுர வீரன் அழகுல’ பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஆயினும் முதலில் இந்தப் பாடலை பாடகி ராஜலட்சுமி பாடியுள்ளார் எனத் தெரிவிக்கப்படும். ஆனால் அதிதி குரலில் பாடல் வெளியாகியுள்ளத.
சங்கரின் மகள் அதிதி என்பதால் ராஜலட்சுமி புறக்கணிக்கப்பட்டு அதிதியை பாட வைத்துள்ளார்கள் என விமர்சனம் எழுந்துள்ளது.
இதற்கு பாடகி ராஜலட்சுமி விளக்கமளித்துள்ளார்.

‘‘எனக்கு இதில் எந்த வருத்தமும் கிடையாது. அதிதி நன்றாகவே அந்தப் பாடலை பாடியுள்ளார். எனது குரல் செட் ஆகாமல் இருந்திருக்கலாம். அதற்காக கூட அதிதியை மாற்றியிருக்கலாம். பாடல் வெளியீட்டு விழாவில் அதிதி பாடியது நன்றாக இருந்தது.

சரியானவர்களுக்கு தான் வாய்ப்பு கொடுத்துள்ளார்கள் என்பதில் சந்தோசமே” என்று ராஜலட்சுமி தெரிவித்துள்ளார்.

Exit mobile version