செய்திகள் பிரதான செய்தி முல்லைத்தீவு

விறகு வெட்ட சென்றவரை விரட்டித் தாக்கிய இராணுவம்!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, மருதங்குளம் பகுதியில் விறகு வெட்டுவதற்காக காட்டுக்குச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் படையினரால் தாக்கப்பட்ட நிலையில் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தனது வீட்டுக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதிக்கு விறகு வெட்டுவதற்குச் சென்ற குறித்த நபர், படையினர் நிற்பதைக் கண்டு, அங்கிருந்து வீடு நோக்கி செல்ல முயன்ற போதே அவரை துரத்திப் பிடித்து இராணுவத்தினரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

கணவனைக் காணவில்லை என்று, மனைவியால் கிராம அமைப்பின் தலைருக்குத் தெரிவிக்கப்பட்ட நிலையிலேயே பொலிஸ் நிலையத்தில் இருந்து குறித்த நபர் அழைத்து வரப்பட்டுள்ளார்.

Related posts

377 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது

G. Pragas

தமிழர்களை கொன்றவர் பாதுகாப்பு செயலாளராக நியமனம் என குற்றச்சாட்டு

Tharani

ஜனநாயக போராளிகள் கட்சி சஜித்துக்கு ஆதரவு

G. Pragas